Cinema
மாட்டிறைச்சி சாப்பிடுவேன்.. 11 ஆண்டுகள் கழித்து ரன்பீர் கபூருக்கு இந்துத்துவ கும்பல் எதிர்ப்பு!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். அதேபோல் நட்சத்திர நாயகியாக வளம் வருபவர் ஆலியா பட். இவர்கள் இருவரும் காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த தம்பதி மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜெய்னி உள்ள மகாகாளி கோயிலுக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இந்துத்துவ கும்பல் ஒன்று இருவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டினர்.
மேலும் அவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என கூறி முழக்கங்களை எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அங்குப் பரபரப்பு நிலவியது.
இந்த சம்பவத்திற்குக் காரணம் 11 வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் நடிகர் ரன்பீர் கபூர் "நான் விரும்பி மாட்டிறைச்சி சாப்பிடுவேன்" என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது திடீரென வைரலாகி வருகிறது.
இவர் மாட்டிறைச்சி சாப்பிடுபவர் காளிகோயிலுக்குள் நுழைக்கூடாது என கூறி இந்துத்துவ கும்பல் அவருக்குக் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இவர் நடிப்பில் வெளியாகியுள்ள 'பிரம்மாஸ்திரா' படத்தைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் சமூகவலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இதையடுத்து உணவு என்பது அவர்கள் தனிப்பட்ட உரிமை. யார் எதைச் சாப்பிட வேண்டும் என்று யாரும் கூற முடியாது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே உணவு உரிமை மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது என கூறி ரன்பீர் கபூர், ஆலியா பட் ஜோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
திராவிட மாடல் 2.0 ஆட்சியை மலரச் செய்வோம் : பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி சூளுரை!
-
“விவசாயிகள் முதுகில் குத்திய பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும்” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சமூக விரோத சட்டங்கள் : தொழிலாளர் வர்க்கத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் ஒன்றிய அரசு - முரசொலி!
-
ரூ.50 இலட்சத்தில் பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவனுக்கு திருவுருவச் சிலை... திறந்து வைத்தார் முதலமைச்சர் !
-
“தமிழ்நாட்டில் பொய்யும், ஒப்பனையும், கற்பனையும் ஒருபோதும் நீடிக்காது” - RN ரவிக்கு கி.வீரமணி பதிலடி!