Cinema
"இந்தி சினிமா குழப்பத்தில் இருக்க காரணமே இந்த படம்தான்" - பிரபல இயக்குனர் விமர்சனம் !
கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்துறை இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த படம் பாகுபலி. அனுஷ்கா, பிரபாஸ், தமன்னா, சத்யராஜ், ராணா, நாசர், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்புல வெளிந்த இந்த படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது.
அதன்பின்னர் 2017-ம் ஆண்டு வெளியான பாகுபலி-2 படம் பாகுபலியின் முதற்பாகத்தின் வெற்றியை விட மிகபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் தெலுங்கு சினிமா மீதான பார்வையை ஒட்டுமொத்தமாக மாற்றியது.
அதுவரை இந்தி படங்களே இந்திய படங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், அந்த நிலையை பாகுபலி மாற்றியது. அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் இருந்து வெளிவந்த KGF,RRR, விக்ரம் போன்ற படங்கள் இந்தி பேசும் மாநிலங்களில் பெரும் வெற்றியை பெற்றது.
அதேநேரம் முன்னணி நாயகர்கள் நடிப்பில் வெளியான இந்தி படங்கள் விமர்சன ரீதியாகும், வசூல் ரீதியாகும் பெரும் தோல்வி அடைந்தது. இதனால் தென்னிந்திய படங்கள் குறித்த பார்வை இந்திய அளவில் எழுந்தது. முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் போன்றோர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். பாகுபலி திரைப்படம் தொடர்பாக பேசிய அவர், "பாலிவுட்டின் மிகப் பெரிய இயக்குநர் ஒருவர், 'KGF 2 படத்தை பார்க்க 5 முறை முயன்றேன். அரை மணி நேரத்துக்கு மேல் முடியவில்லை. அந்தப் படத்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதன் வெற்றியைப் புறக்கணித்துவிட முடியாது.
லாஜிக் இல்லாத அந்தப் படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறது. இந்த வெற்றியால் இந்தி சினிமாத் துறை குழப்பத்தில் இருக்கிறது. அதற்காக எனக்கு இந்தப் படம் பிடிக்காமல் இல்லை. அதுபற்றி சொல்ல சரியான வார்த்தை கிடைக்கவில்லை'' எனக் கூறினார்.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!