Cinema

BMW காருக்கு காத்தடிக்க சென்ற டான்ஸ் மாஸ்டர்.. காரின் முக்கிய உதிரி பாகங்கள் திருடிய ஊழியர்கள் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குநராக இருப்பவர் ஸ்ரீதர். இவர் நேற்று வெளியில் பயணம் செய்து விட்டு சென்னை தியாகராயர் நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சென்றுள்ளார். பெட்ரோலை நிரப்பிய பின்னர், தனது காரின் டயருக்கு காற்று நிரப்ப கூறியபோது, இரண்டு வட மாநில இளைஞர்கள் காற்றடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அவரது காரின் டயரில் எதோ ஒரு பொருளை மாற்றுவதை கண்டார். எனவே உடனே தனது காரில் இறங்கி இது குறித்து அந்த இளைஞர்களிடம் விவரம் கேட்டார். பின்னர் இது குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, "அப்போது காருக்கு காத்து அடித்துக் கொண்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவர் அவரது கார் டயரில் உள்ள பொருளை எடுத்து மாற்று பொருளை வைத்தபோது அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். இது நடந்ததை விளக்கி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் உங்க ஸ்ரீதர் மாஸ்டர் பேசுகிறேன். நான் இங்கு பாரத் பெட்ரோல் பங்கில் இருக்கிறேன். GT BMW காருக்கு காற்று அடிக்க வந்தேன். அங்கு 2 இந்திகாரர்கள் காற்று அடித்தார்கள். அப்போது காற்று அடிக்கும் இயந்திரத்தில் ஒரு இடத்தில் ஊழியர் கை வைத்துக்கொண்டே இருந்தார். எதற்க்கு அப்படி வைத்தார்கள் என்று தெரியவில்லை. நான் அதை பார்த்து திறக்க சொன்னேன்." என்று அங்கிருந்த ஒரு சிறிய அறையின் கதவை திறந்து காட்டினார்.

அப்போது அந்த அறைக்குள் பல விலை அதிகமான கார்களில் உள்ள ஏராளமான உதிரி பாகங்கள் கிடந்தன. இதை தனது வீடியோவில் காட்டிய ஸ்ரீதர், "அதாவது ஒவ்வொரு பி.எம்.ட்பிள்யு போன்ற விலை உயர்ந்த கார்களின் உதிரி பாகங்கள் ரூ.500 முதல் ரூ.1000 வரை இருக்கும். இதுகூட பராவாயில்லை. ஆனால், இதை போலியாக மாற்றுகிறார்கள்.

நமது காற்று இது. இவ்வாறு செய்வது மிக மிக தவறானது. இது அனைவருக்கும் போய் சேர வேண்டும். அதற்காக வீடியோ மூலம் தெரிவிக்கிறேன். இது எனக்காக மட்டும் இல்லை. நான் இந்த இடத்திற்கு இப்படியே காரில் வரவில்லை. சைக்கிளில் தான் வந்தேன். சிறிய சிறிய விசயமாக இருந்தாலும் கஷ்டப்பட்டே எல்லோரும் சம்பாதிக்கிறார்கள். தவறாக விசயத்தை விடக்கூடாது.

எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் காத்து அடிக்கும்போது இறங்கி என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். திரும்பவும் அதை வைக்கிறார்களா என்று பாருங்கள். 4 டயர்களிலும் அது இல்லை என்றால் கார் ஷோரும்களுக்குபோய் அதன் விலை என்னவென்று பாருங்க." என்று அறிவுரை கூறியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Also Read: அரசு மருத்துவமனையில் அதிகார தோனி.. வசமாக பிடிபட்ட போலி மருத்துவர்கள் : காரணத்தை கேட்டு அதிர்ந்த போலிஸ் !