Cinema

சூப்பர் OFFER கொடுத்த PVR சினிமாஸ்.. இருந்தாலும் திரைக்கு வராத ரசிகர்கள்.. எதற்காக தெரியுமா ?

உலகளவில் மிகவும் பிரபலமான ஹாலிவுட் திரைப்படம் தான் 'FORREST GUMP'. இந்த படம் 1994-ம் ஆண்டு வெளியான இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இப்படத்தை இந்தியாவில் எடுக்க இயக்குநர் அத்வைத் சந்தன் என்பவர் திட்டமிட்டிருந்தார். அதன்படி இந்த படத்தின் கதாநாயகனாக பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தான் பொருந்துவார் என்று அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்தே அமீர்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சில கும்பல், இந்த திரையிடப்படுவதற்கு முன்பே படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று ட்விட்டர் வாயிலாக அமீர்கானுக்கு எதிராக ஹாஸ்டாக்கை ட்ரெண்ட் செய்தனர். சில வருடங்களுக்கு முன்னர் அவர் தெரிவித்திருந்த சில அரசியல் ரீதியான கருத்துகள் காரணமாக தற்போதும் அவரது திரைப்படங்கள் வெளியிட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் அமீர் கான், கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்ட திரைபிரபலங்கள் நடித்து 'லால் சிங் சத்தா' என்ற பெயரில் கடந்த ஆகஸ்டு 11 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு மொழிகளில் வெளியான இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

இந்த படம் வெளியானதில் இருந்தே இந்திய திரை ரசிகர்கள் புறக்கணித்து வந்த நிலையில் இப்படத்தின் முதல்நாள் வசூலே வெறும் ரூ.50 கோடி தான் பெற்றது. இதனால் மிகவும் வேதனை அடைந்த படக்குழுவினர், இதனை பல விதங்களில் promote செய்ய முயன்றனர். இருப்பினும் திரை ரசிகர்களை கவராத இந்த படத்தை பல திரையரங்குங்கள் தங்கள் தியேட்டரில் இருந்து நீக்கியுள்ளனர்.

மேலும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் அண்மையில் வெளியான 'ரக்ஷா பந்தன்' திரைப்படமும் தற்போது திரையரங்கு ரசிகர்களை பெரிதாக கவராத நிலையில், இந்த படமும் வசூல் ரீதியாக பெரிதும் அடிவாங்கி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய திரையரங்கு நிறுவனமான PVR சினிமாஸ், 'லால் சிங் சத்தா', மற்றும் 'ரக்ஷா பந்தன்' திரைப்படத்தை கணவரும் ரசிகர்களுக்கு ஆஃபர் ஒன்று அறிவித்துள்ளது. அதாவது இந்த படங்களை கணவரும் ரசிகர்கள் 3 டிக்கெட்டுகள் வாங்கினால் 1 இலவசம் என்று தெரிவித்துள்ளது. அதோடு இதனை ஆன்லைனில் தான் புக் செய்ய வேண்டும். மேலும் இந்த ஆஃபர் கடந்த 16-ம் தேதி தொடங்கி வரும் 24-ம் தேதியோடு முடிவடைகிறது.

ஆனால் பிரபல PVR சினிமாஸ் நிறுவனமே இப்படி ஒரு ஆஃபர் கொடுத்தும், திரைக்கு ரசிகர்கள் யாரும் வரவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் திரைபடக்குழுவினர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Also Read: திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு.. இமாச்சல பிரதேசத்தில் ஒரேநாளில் 22 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி !