Cinema
"'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் ஆஸ்காரில் Entry கூட கொடுக்காது.." - பாலிவுட் இயக்குநர் பேச்சால் சர்ச்சை !
கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் தான் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. 1990-களில் காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த திரைப்படத்தை, வலதுசாரி அமைப்புகள் வெகுவாக பாராட்டுத் தெரிவித்து வரவேற்றன.
அதேநேரத்தில் வரலாற்றை திருத்தி அமைக்கும் முயற்சியாக இந்த திரைப்படம் இருப்பதாகவும், இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் மற்ற சில அமைப்புகள் குரல் கொடுத்தனர்.
மேலும் அதே மார்ச் மாதம் பான் இந்தியா அளவில், இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'RRR'. பல்வேறு மொழிகளில் வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை பார்த்து பல்வேறு மொழி படங்களின் இயக்குநர்கள் கருத்து தெரிவித்தும், பாராட்டு தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், இது குறித்து பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யெப் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "சமீபத்தில் வெளியான தென்னிந்திய திரைப்படங்களில் நான் புஷ்பாவை ரசித்தேன்; ஆனால் RRR-ஐ அதிகம் ரசிக்கவில்லை,.ஏனென்றால் நான் ராஜமௌலியின் 'ஈகா' (நான் ஈ) பட ரசிகன்.
RRR படத்தில் வரும் சில ஆக்ஷன் காட்சிகள் என்னை பாதித்தது. விலங்குகள் வெளியே வரும்போது, ‘எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியும்?’ என்று எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் நான் RRR படத்தை பாகுபலிக்கு கீழே, ஈகா படத்துக்கு கீழே, மகதீராவுக்கு கீழே, இன்னும் பல படங்களுக்குக் கீழே தான் வைத்துள்ளேன்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் மார்வெல் படங்களை விட RRR படத்தை வியந்து பார்கின்றனர். இந்தியாவிலிருந்து அதிகாரப்பூர்வ ஆஸ்கார் நாமிஷேனுக்காக RRR தேர்ந்தெடுக்கப்பட்டால் அப்படம் 99% ஆஸ்காருக்கு தேர்வாக வாய்ப்பு உள்ளது.
ஆனால் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் எண்டிரியாக 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் மட்டும் இருக்காது என்று நான் நம்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து சினி வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பா.ஜ.க மோடி அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வரும் இவர், தற்போது பா.ஜ.க பெரிதும் பாராட்டி வரவேற்பு அளிக்கும் 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!