Cinema
"வருகிறான் சோழன்" ! - சோழர்களின் வருகையை எதிர்பார்க்கும் தமிழர்கள்.. வெளியாகும் PS 1 : புதிய UPDATE..
எழுத்தாளர் கல்கியின் புகழ் பெற்ற படைப்புகளில் ஒன்றான 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு, பிரபல இயக்குநர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' என்ற தலைப்பில் திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஜெயம்ரவி, த்ரிஷா, விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, பிரகாஷ்ராஜ் என்று மிகப்பெரிய திரை பட்டாளமே நடிக்கவிருக்கும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று PAN இந்தியா வடிவில் வெளியாக இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்புகள் அண்மையில் முடிந்தது. தற்போது இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த படத்தின் வெளியீடு எப்போது என்று திரை ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்த நிலையில், வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியிடவுள்ளதாக அண்மையில் அதிகாரபூர்வ அறிவிப்புகளை படக்குழுவினர் வெளியிட்டனர். இதையடுத்து இதன் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது 10 Second-க்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழுவினர்.
'வருகிறது பொன்னியின் செல்வனின்' அப்டேட் என்று உணர்த்தும் வகையில் 'வருகிறான் சோழன்' என்ற தலைப்பில் வெளியிட்ட தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் இதன் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!