Cinema
நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம் : நுரையீரல் பாதிப்பு.. புறாக்களின் எச்சம் காரணமாக அலர்ஜி ?
குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை மீனா. பல முன்னணி நடிகர்களுடம் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்தவர். இன்று தமிழ் சினிமாவில் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார். இவர் 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெங்களூருவை பூர்வீகமாக கொண்டவர் வித்யாசாகர். நடிகை மீனா - வித்யா சாகர் தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். அவரிம் ஒருசில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கடந்த சில மாதங்களாகவே நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்றுவந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நுரையீரல் செயலழிந்துள்ளது.
இதனால், உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். ஆனால், தானமாக உறுப்புகள் கிடைக்காத நிலையில், அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்ததாக மருத்துவர்கள் தரப்பில் கூறிவந்துள்ளனர்.
மாற்று உறுப்பு தானம் கிடைக்க மேலும் தாமதமான நிலையில், வித்யாசாகர் இன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். வித்யாசாகருக்கு புறாக்களின் எச்சங்களினால் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்களின் அறிக்கை முழுமையாக வெளியாவில்லை. நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்த சம்பவம் தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!