Cinema
விஜய் 66ல் சரத்குமாருக்கு என்ன ரோல்? கசிந்த தகவலால் எகிரும் எதிர்பார்ப்பு!
விஜய்யின் 65 படமாக வெளியாகியுள்ள பீஸ்ட் படத்திற்கு அவரது ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி இருக்கையில் வம்சி இயக்கத்தில் உருவாக இருக்கும் அவரது அடுத்த படத்துக்கான பணிகளில் படக்குழு இறங்கியுள்ளது.
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாக உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கவிருக்கிறார். தமன் இசையமைக்கும் இதில் சரத்குமாரும் இணைந்துள்ளார்.
படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலானது போன்று தற்போது விஜய் 66 குறித்த அண்மைத் தகவல் கசிந்திருக்கிறது.
அதன்படி, இந்த படத்தின் விஜய்யுடன் முதன் முதலாக திரையில் தோன்றவிருக்கும் சரத்குமாருக்கு அவரது தந்தை கதாப்பாத்திரமாக நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே தெறி படத்தில் ராதிகா-விஜய்யின் அம்மா மகன் கதாப்பாத்திரம் ரசிகர்கள் ஈர்த்திருந்த நிலையில் விஜய்-சரத்குமார் அப்பா மகனாக தோன்ற இருப்பதாக தகவல் வெளியானது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகபடுத்தியுள்ளது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க இருக்கும் இந்த படம் 2022க்குள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
25 ஆண்டுகள் - பிரதமர் மோடியின் அடையாளம் இதுதான் : முரசொலி தலையங்கம்!
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !