Cinema
வில் ஸ்மித் படங்கள் இனி ஆஸ்கரில் பங்கேற்க தடையா? ஆஸ்கர் கமிட்டியின் அதிரடி முடிவால் ஹாலிவுட்டில் பரபரப்பு
பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித், சமீபத்தில் நடந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், King Richard படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.
அந்த மேடையில் தனது மனைவியை கேலி செய்த தொகுப்பாளரை முகத்தில் அறைந்தது உலகளவில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே ஹாலிவுட் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித். மேலும், இவர் ஆஸ்கர் மேடையில் தொகுப்பாளரான க்றிஸ் ராக்கை அறைந்தது குறித்து ஆஸ்கர் விசாரணை கமிட்டி வரும் 18ஆம் தேதி கூடி ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், இந்த கமிட்டி நாளை கூடி இது குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக இனி வில் ஸ்மித் நடிக்கும் படங்கள் ஆஸ்கர் விழாவில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட், “ஆஸ்கர் மேடையில் கிறிஸ் ராக்கை வில் அடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் நிதானமின்றி செயல்பட்டுவிட்டார்” எனக் கூறியிருக்கிறார்.
இதனிடையே, கிறிஸ் ராக் ஜடா ஸ்மித் குறித்து பேசிய போது அதற்கு முதலில் சிரித்துவிட்டு பின்னர் ஜடாவை பார்த்த பிறகே ராக்கை வில் ஸ்மித் ஆஸ்கர் மேடையில் அறைந்தார் எனவும் ஒரு புறம் பேசப்பட்டு வருகிறது.
Also Read
-
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
-
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
-
“பச்சை, மஞ்சள் கலர் பஸ்ல யாரு வந்தாலும், கடைசியா பிங்க் கலர் பஸ்தான் ஜெயிக்கும்” - துணை முதலமைச்சர் கலகல!
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !
-
‘அன்புக்கரங்கள்' திட்டம் : கருணையின் முதல்வராகக் காட்சி தருகிறார் மு.க.ஸ்டாலின்... முரசொலி புகழாரம் !