Cinema
பிரபல மலையாள நடிகர் கைனகரி தங்கராஜ் திடீர் மறைவு.. திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல மலையாள நடிகர் கைனகரி தங்கராஜ் (71). கேரள மாநிலம், கொல்லம் அருகில் உள்ள கேரளாபுரத்தைச் சேர்ந்தவர், பிரபல மலையாள நடிகர் கைனகரி தங்கராஜ். நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், பிரேம் நசீர் நடித்த அனாப்பச்சன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
அதன்பின்னர் 35 படங்களில் நடித்துள்ளார். மோகன்லாலின் லூசிபர் மற்றும் இஷ்க், ஹோம் ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். கடைசியாக மம்முட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்தார். அதுமட்டுமல்லாது, சுமார் 10,000 நாடகங்களில் நடித்துள்ள இவர், சிறந்த நாடக நடிகருக்கான விருதை இரண்டு முறை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் கல்லீரல் தொடர்பான பிரச்சினையில் சிகிச்சையில் இருந்து வந்தநிலையில், நேற்றைய தினம் அவரது வீட்டில் காலமானார். மேலும் கைனகரி தங்கராஜின் மறைவு கேரளத் திரைப்படத்துறையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபல மலையாள நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?