Cinema
இந்தியாவின் MJக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த படக்குழு.. மலையாளத்தில் தடம் பதிக்கும் ’ஜோக்கர்’ நாயகன்!
1. ‘அனந்தம்’ தொடரின் டீஸரை வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா...
இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனர் பிரியா.வி ‘அனந்தம்’ எனும் தலைப்பில் வெப் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். இது 1964-2015 வரை அனந்தம் என்ற வீட்டில் வாழ்ந்த 3 தலைமுறைகளின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உணர்ச்சிகரமான தருணங்களை தொகுத்துள்ள இணைய தொடர். இந்த தொடர் வருகிற 22ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த தொடரின் டீஸரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.
2. வேற்றுமொழி படங்களில் நடிக்க மாட்டேன் - ஜான் ஆப்ரஹாம்...
பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜான் ஆப்ரஹாம் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை மறுத்துள்ள அவர் வேற மாநில மொழிப் படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லை என்றும், மற்றவர்களை போல வியாபாரத்துக்காக அதை செய்ய மாட்டேன். ஏனென்றால் நான் இந்தி நடிகர்’ எனக் கூறியுள்ளார்.
3. மலையாளத்தில் பிஸியாகும் தமிழ் நடிகர் குரு சோமசுந்தரம்...
தமிழில் ஆரண்யகாண்டம், ஜிகர்தண்டா, ஜோக்கர் ஆகிய படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் குரு சோமசுந்தரம் கடைசியாக மலையாளத்தில் வெளியான ‘மின்னல் முரளி’ படத்தில் ஷிபு எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்திருந்தார், இதன் பலனாக அடுத்தடுத்து மலையாள சினிமாவில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது பர்ரோஸ், கப், ஹயா ஆகிய படங்களில் இவர் நடித்து வருகிறார்.
4. பிரபு தேவாவின் பிறந்தநாளை புதிய போஸ்டரோடு கொண்டாடிய படக்குழு...
இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான பிரபு தேவா நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. வெவ்வேறு ஜானர்களில் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவர் நடித்துவரும் ரேக்ளா, பொய்க்கால் குதிரை, முசாசி ஆகிய படக்குழுக்கள் புதிய போஸ்டரை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.
5. இடியட் படத்தின் புதிய ஸ்னீக் பிக்...
இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் சிவா மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘இடியட்’. ராம்பாலாவின் வெற்றி ஃபார்முலாவான ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனிடையே படத்தின் ஸ்னீக் பிக் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!