Cinema
இளம் நடிகை விபத்தில் மரணம்; குடிபோதையால் விபரீதம்? அதிர்ச்சியில் திரையுலகினர்; ஐதராபாத்தில் நடந்தது என்ன?
பிரபல தெலுங்கு துணை நடிகை காயத்ரி என்கிற டோலி டி க்ரூஸ் ஹோலி பண்டிகையன்று கோர விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேடம் சார் மேடம் அன்ந்தே உள்ளிட்ட பல தெலுங்கு வெப் சீரிஸ், சீரியல் மற்றும் குறும்படங்களில் நடித்திருந்த 26 வயதே ஆன காயத்ரி, ஜல்சா ராயுடு என்ற யூடியூப் சேனல் மூலம் தெலுங்கு இணையவாசிகளிடையே மிகவும் பிரபலமானார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 18ம் தேதி நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட போது தெலங்கானா மாநிலத்திம் ஐதராபாத்திலும் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது.
அப்போது தெலுங்கு நடிகையான காயத்ரியும் அவரது நண்பரும் தொழிலதிபருமான ரஹோத்தும் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்றிருந்திருக்கிறார்கள்.
மது அருந்தி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இருவரும் மாலை காரில் புறப்பட்டு சென்றதாகவும், அதில் முழு போதையில் இருந்த ரஹோத்தான் காரை ஓட்டியிருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் கச்சிபெளலி அருகே அதிவேகமாக கார் சென்றுக் கொண்டிருந்த போது சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியிருக்கிறது. இதனால் ஏற்பட்ட விபத்தில் நடிகர் காயத்ரியும் அவ்வழியே சென்ற பெண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறார்கள்.
காரை இயக்கிய ரஹோத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டு அருகே இருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து காயத்ரி மற்றும் மற்றொரு பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலிஸார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே நடிகை காயத்ரியின் இந்த திடீர் மரணச் செய்தியால் தெலுங்கு திரையுலகினர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!