Cinema
“பெண்களை மட்டமாக எடைபோடுவதை நிறுத்துங்கள்” : ஆடை குறித்த விமர்சனத்திற்கு நடிகை சமந்தா பதிலடி !
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அந்த விழாவில் இவர் பச்சை நிற உடை ஒன்றை அணிந்திருந்தார்.
இந்த உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைத் தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலர் அவர் அணிந்திருந்த ஆடை குறித்து விமர்சனங்களை எழுப்பினர். இதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவரது சமூகவலைத்தள பதிவில், "பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை மட்டமாக எடைபோடுவதை முதலில் அனைவரும் நிறுத்துங்கள். இனம், படிப்பு, சமூகம், நிறம் என அவர்களை அடையாளப்படுத்தும் பெரிய பட்டியலே அங்கு உள்ளது.
நாம் 2022ல் இருக்கிறோம். இப்போதும் பெண்களின் உடையை வைத்து அவர்களை அடையாளப்படுத்துகிறோம். இதை நிறுத்துங்கள். அவர்களின் உடையை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு நம்மை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்” என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரின் இந்த சமூக வலைத்தளப் பதிவு இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் நடிகர்கள் பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
Also Read
-
”இடஒதுக்கீடு கொள்கையின் பிதாமகன் தமிழ்நாடு” : சட்டப்பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!