Cinema
‘அம்மன் தாயீ…‘ : பல ஆண்டுகளுக்கு பிறகு அஜித் தங்கையாக 'வலிமை' திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்!
கடந்த 1995ஆம் வெளிவந்த ‘அம்மன்’ திரைப்படத்தில் அம்மன் தாயீ கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர்தான் ‘வலிமை’ திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்துள்ளார்.
கோடி ராமகிருஷ்ணா இயக்கிய ‘அம்மன்’ படத்தில் சௌந்தர்யா, வடிவுக்கரசி, சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் என்று பலர் நடித்து இருந்தனர். இவர்களுடன் ஒரு சிறுமியும் நடித்திருப்பார். அவர் பெயர் சுனைனா.
சுனைனா தற்போது திருமணமாகி தனது மகன் மற்றும் கணவருடன் வசித்து வருகிறார். ‘அம்மன்’ படத்தை தொடர்ந்து இவர் குறுகிய வருடங்களிலேயே தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக 25 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார்.
பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் சமந்தா நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘ஓ பேபி’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சுனைனா.
இந்நிலையில் நடிகை சுனைனா, ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு சகோதரியாக நடித்திருந்தார்.
சுனைனா, யூடியூபில் ‘Mee Sunaina' எனும் பெயரில் சேனல் நடத்தி வருகிறார். அதில் பெண்கள் தங்களது வாழ்கையில் விரக்தி அடைந்து செய்யும் விஷயங்களை காமெடியாக வெப் சீரிஸாக வெளியிட்டு வருகிறார்.
Also Read
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாடிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!