Cinema
OTTல் எப்போது வருகிறது வலிமை? : ரிலீசான மூன்றாவது நாளே வெளியானது புது அப்டேட்
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24ம் தேதியன்று வெளியாகியிருக்கிறது வலிமை திரைப்படம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்லுமிடமெல்லாம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்த படம் பொது சினிமா பார்வையாளர்களை அவ்வளவாக கவர தவறிவிட்டதாக கருத்துகள் வலம் வருகிறது.
கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்த போதும் முதல் நாளிலேயே 34 கோடி ரூபாய்க்கு வலிமை படம் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே படத்தின் 14 நிமிட காட்சிகள் எடிட் செய்யப்பட்டு இன்று முதல் வெளியாகும் என படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வெளியான மூன்றாவது நாளிலேயே வலிமை படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கசிந்திருக்கிறது. அதன்படி, Zee நெட்வொர்க் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியிருக்கும் வேளையில் எதிர்வரும் மார்ச் 25ம் தேதி zee5 தளத்தில் தமிழ், தெலுங்கு என 5 மொழிகளிலும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!