Cinema
”அஜித் ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய விஜய் ரசிகர்கள்” - சென்னையில் வலிமை பட திரையிடலின் போது நெகிழ்ச்சி!
அஜித்தின் வலிமை படம் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான நிலையில் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
பெரும்பாலான பகுதிகளில் அஜித்துக்கு கட் அவுட், பேனர் வைத்து ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். படம் வெளியாகி முதல் பாதி முடிந்ததுமே அனைவரும் தவறாது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அவ்வகையில் வலிமை படத்துக்கு கலவையான விமர்சனங்களே இதுகாறும் வந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் அஜித்தின் படத்தை காண விஜய்யின் ரசிகர்களும் தியேட்டர்களுக்கு படையெடுத்துள்ளனர்.
இப்படி இருக்கையில், சென்னையில் உள்ள திரையரங்கில் விஜய் ரசிகர்களின் கூட்டம் ஒன்று படம் பார்க்க வந்திருக்கிறார்கள். அப்போது, அவர்களின் நண்பர் ஒருவர் அஜித் ரசிகர் என்றும் வலிமை படத்தை பார்க்க வேண்டும் என காத்திருந்தார்.
ஆனால் அண்மையில் அவர் இறந்துவிட்டதால் அவர் சார்பாக வலிமை படத்தை காண வந்திருக்கிறோம் என விஜய் ரசிகர்கள் கூறியுள்ளார்கள். இதுபோக மறைந்த அவர்களது நண்பனின் படம் பொறித்த பேனரை வைத்தும் வலிமை படத்தை கொண்டாடியிருக்கிறார்கள்.
இந்த நிகழ்வால் திரையரங்கள் இருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!