Cinema
“இந்த உணவை இங்கே எடுத்து வரக்கூடாது”: மும்பை ஸ்டார் ஓட்டலின் மனிதாபிமானமற்ற செயல் - மலையாள நடிகை ஆவேசம்!
'ஒரு அடார் லவ்' படத்தின் மூலம் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியவர் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இதையடுத்து மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கில் 'செக்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதனால் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.
இதையடுத்து, படப்பிடிப்பு முடித்துவிட்டு உணவகம் ஒன்றில் இரவு உணவு வாங்கிக் கொண்டு விடுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விடுதி ஊழியர்கள் வெளியே வாங்கி வந்த உணவை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என கூறியுள்ளனர்.
நட்சத்திர விடுதியின் இந்த நடவடிக்கை கண்டித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில் "படப்பிடிப்பு முடித்து உணவகம் ஒன்றில் உணவு வாங்கி விடுதிக்குச் சென்றேன்.
அப்போது, அங்கிருந்த ஊழியர்கள் வெளியே வாங்கிய உணவை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. இதை நீங்கள் வெளியே சாப்பிட்டு வரவும் அல்லது குப்பியில் போடுங்கள் என கூறினர். உணவு வீணாக்கக் கூடாது என்பதால் வெளியே சென்று உணவை சாப்பிட்டு விட்டு விடுதிக்கு வந்தேன்.
நட்சத்திர விடுதியின் இந்த மனிதாபிமானமற்ற செயல் எனக்கு வியப்பை கொடுக்கிறது” என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த விடுதிக்கு அவரின் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”கொளத்தூரின் ஒவ்வொரு தெருவிலும் நான் உருவாக்கிய திட்டங்கள்”- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
’அழக்கூடாது’... கொளத்தூர் மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!
-
2026 சட்டமன்ற தேர்தல் : 11 ஆவது தோல்வி - 16 தொகுதிகளில் டெபாசிட் இழந்த அ.தி.மு.க!
-
“நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்” : தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி!
-
“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” : கலைஞர் எழுதிய சுவாரஸ்ய கடிதம் !