Cinema
பிரபல சீரியல் நடிகையின் 6 வயது மகள் விபத்தில் பலி; கோர நிகழ்வால் திரையுலகத்தினர் சோகம்!
பெங்களூருவில் உள்ள கொனான்குண்டே என்ற பகுதியில் நேற்று (ஜன.,13) அன்று மாலை 4.30 மணியளவில் டூ வீலரில் சென்றுக் கொண்டிருந்த தாய் மகள் மீது எதிரே வந்த லாரி மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கியது கன்னட தொலைக்காட்சியில் 25க்கும் மேலான சீரியலில் நடித்த நடிகை அம்ருதா நாயுடுவும் அவரது 6 வயது மகளான சாம்னவியும்தான். இந்த சாம்னவி பிரபல கன்னட பொழுதுபோக்கு நிகழ்ச்சியான நன்னம்மா சூப்பர் ஸ்டாரில் பங்கேற்று பலரது பாராட்டையும் பெற்றவர் ஆவார்.
இந்நிலையில் அம்ருதாவும் சாம்னவி வந்த இருசக்கர வாகனம் மீது லாரி ஏறியதில் சாம்னவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். பலத்த காயமுற்ற அம்ருதாவுக்கு கிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்ததோடு லாரி ஓட்டுநரையும் குமாரசாமி லே அவுட் போலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த கோர நிகழ்வு கன்னட தொலைக்காட்சி ரசிகர்களையும் திரையுலகளிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!