Cinema
மலையாள பிரபலங்களை வைத்து ஆந்தாலஜி திரைப்படம்.. அதிரடியாக களமிறங்கும் NETFLIX!
பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு ஆந்தாலஜி திரைப்படத்தைத் தயாரிக்க நெட்ஃபிக்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் ஆந்தாலஜி படத்தை மலையாள திரையுலகின் நட்சத்திரங்களா மம்மூட்டி, மோகன்லால், பஹத் பாசில், ஆசிப் அலி மற்றும் சாந்தி கிருஷ்ணா போன்ற பிரபலங்கள் இதில் நடிக்க உள்ளனர்.
அதேபோல், லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, பிரியதர்ஷன், ஜெயராஜ், ஷியாமபிரசாத், சந்தோஷ் சிவன் மற்றும் மகேஷ் நாராயணன் ஆகிய இயக்குநர்கள் தங்களுக்கான கதைகளை இயக்க உள்ளனர்.
இந்த கதைகளை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதாகவும் அவர் படத்தில் நடிக்கவோ, இயக்கவோ இல்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு தமிழில் நெட்ஃபிளிக்ஸின் வெளியீடாக 'நவரசா' வெளியானது. இதில் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், ரேவதி, பார்வதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நெட்ஃபிக்ஸ் தனது சந்தையை விரிவுபடுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக மலையாளத்திலும் முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. அதேபோல் தெலுங்கிலும் இதேபோன்று பிரபல நடிகர்களை வைத்து ஆந்தாலஜி படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!