Cinema
”'வலிமை’ங்றது அடுத்தவன காப்பாத்ததான்; அழிக்க இல்லை” - எப்படி இருக்கிறது வலிமை ட்ரெய்லர்?
ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு தீனி போட்டிருக்கிறதா வலிமை ட்ரெய்லர் என்பதை பார்ப்போம்.
அஜித்தின் 60வது படமாக உருவாகியுள்ளது வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே 10 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை எட்டியிருக்கிறது.
அர்ஜுன் என்ற பெயரில் போலிஸ் அதிகாரியாக வரும் அஜித், பைக் ரேஸை வைத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வில்லனான கார்த்திகேயாவின் திட்டங்களை எப்படி முறியடிக்கிறார் என்பதே கதையாக இருக்கும் என ட்ரெய்லரின் மூலம் தெரிகிறது.
மதுரை சிறையில் வைத்து தமிழ்நாட்டில் நடக்கும் கொலைகளுக்கு திட்டம் தீட்டுவது போல தொடங்கும் ட்ரெய்லர் கேம் இன்னும் முடியல என்ற வசனத்துடன் முடிகிறது.
ட்ரெய்லர் முழுக்க அஜித் மற்றும் கார்த்திகேயா இருவரும் அவரவர் சூழலுக்கு ஏற்ப பஞ்ச் டையலாக்குகளை சொல்கின்றனர். ஏழ்மை, பணக்காரர் என்ற பாணியில் செல்கிறது அவர்களது வசனங்களை.
அதில், ‘வலிமை இருக்கவ அவனுக்கு என்ன வேனுமோ அத எடுத்துப்பான்’ வில்லன் சொல்லி முடிக்க ‘வலிமைங்றது அடுத்தவன காப்பாத்ததான். அழிக்க இல்லை’ என அஜித் பதிலடி கொடுக்கும்படி இடம்பெற்றிருக்கிறது. இப்படியாக பஞ்ச் டையலாக்குகள் நீள்கிறது.
ட்ரெய்லரில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த படக்குழு பொங்கலுக்கு ரிலீஸ் என்பதோடு விட்டுவிட்டு வெளியீட்டு தேதியை குறிப்பிடமால் உள்ளது. வலிமை ட்ரெய்லர் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அனைத்து சமூக வலைதளங்களிலும் ஹாட் டாபிக்காக உருவெடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
- 
	    
	      பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
- 
	    
	      ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
- 
	    
	      காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !