Cinema
சாமானியர்கள் மீதான வன்முறையை துணிச்சலாக படமாக்கியுள்ளது ’ஜெய்பீம்’ - பார் கவுன்சில் தலைவர் புகழாரம்!
உண்மை சம்பவத்தை அப்படியே துணிச்சலாக படமாக்கிய ஜெய்பீம் படக்குழுவினருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பாராட்டு தெரிவித்துள்ளர்.
இது சம்பந்தமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பட இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா மற்றும் நீதிபதி சந்துரு ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில் உண்மை சம்பவத்தை அப்படியே துணிச்சலாக படமாக்கி இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த அளவுக்கு துன்புறுத்தல்களை சந்திக்கிறார்கள், அப்பாவி மக்கள் எப்படி அவதிப்படுகிறார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் நடிகர் சூர்யா வழக்கறிஞராக சிறப்பாக நடித்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சாமானியர்கள் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறை குறித்து இத்திரைப்படம் மக்களை யோசிக்க செய்துள்ளது. சினிமாத்தனம் இல்லாத நீதிமன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, வழக்கறிஞர் தொழிலின் மகத்துவத்தையும், நீதிமன்றங்களின் மாண்பையும் ஜெய்பீம் எடுத்துரைக்கிறது.
நீதிமன்ற விசாரணைகளை வழக்கறிஞர் வாதங்களை அப்படியே பிரதிபலித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், ராஜாகண்ணு மற்றும் அவரது குடும்பத்தினர் பட்ட துயரங்களையும் அவர்களுக்கு சுயநலமில்லாமல் எந்த கட்டணமும் வசூலிக்காமல் நீதி பெற்றுத் தந்த நீதிபதி சந்துருவின் சேவையும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற அத்துமீறல்களுக்கு நீதி பெற்றுத் தந்த வழக்கறிஞர்களின் பணியைப் பாராட்டும் இந்த நேரத்தில், ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை பெற்றுத்தர அனைத்து வழக்கறிஞர்களும் முன்வரவேண்டும் என்றும் சமுதாயத்தில் அனைவரும் சமம் என்ற அம்பேத்கரின் கணவை எட்ட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Also Read
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? : ஏன் எற்றப்படுகிறது- எதை உணர்த்துகிறது!
-
சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் நீர் தேக்கம் இல்லை! : சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன?
-
விஜய் அனுப்பிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்!