Cinema
விஜய், ரஜினி படங்கள் அமேசான் ப்ரைமில் இருந்து நீக்கப்படுவது ஏன்? - ரசிகர்கள் கொதிப்பு!
கொரோனா ஊரடங்குக்கு பிறகு ஆன்லைன் தளங்கள் மூலம் புது மற்றும் பழைய படங்களை பார்ப்பதில் மக்கள் அதிகளவில் ஆர்வம் செலுத்தி வருகிறது.
அதன்படி தினமும் ஒரு படம் அல்லது வெப் தொடர்களையாவது பார்ப்பதும் வழக்கமாகி வருகிறது. மேலும், திரையில் பார்க்காத சில படங்களையும் விளம்பர இடைவேளை இல்லாமல் குடும்பத்துடன் படங்களை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் தெறி மற்றும் ரஜினியின் கபாலி படங்களை தனது தளத்தில் இருந்து நீக்கப் போவதாக அமேசான் ப்ரைம் அறிவித்துள்ளது.
ஏனெனில் இந்த இரண்டு படங்களின் ஆன்லைன் ஒளிபரப்பு உரிமம் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே உள்ளது.
அதன்படி உரிமம் முடியும் காலம் நெருங்கிவிட்டதால் தெறி படத்தை 4 நாட்களுக்குள்ளும், கபாலி படத்தை 9 நாட்களுக்குள்ளும் அமேசான் ப்ரைமில் இருந்து நீக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் ப்ரைமில் இருந்து நீக்கப்பட்ட பிறகு நெட்ஃப்ளிக்ஸ் அல்லது சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது. தெறி மற்றும் கபாலி படத்தை தயாரித்தது கலைப்புலி எஸ்.தாணு என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!