Cinema

“சண்டை காட்சியை படமெடுக்கும்போது நடந்த விபரீதம்.. கேமராமேன் பலி - டைரக்டர் கவலைக்கிடம்” : நடந்தது என்ன?

ஹாலிவுட் நடிகர் அலெக் பால்ட்வின் 'ரஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜோயல் சோஸா என்பவர் இயக்கி வருகிறார்.மெக்சிகோவில் படத்திற்காகப் படப்பிடிப்பு வேலைகள் நடந்தது.

அப்போது சண்டைக் காட்டி ஒன்று படமாக்கப்பட்டது. இதில் துப்பாக்கியால் சுடும் காட்சியின்போது, நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டத்தில், இயக்குனர் ஜோயல் சோஸா மற்றும் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் மீது குண்டு பாய்ந்துள்ளது.

எப்படி டம்பி துப்பாக்கியில் இருந்து குண்டு வெளி வந்தது என ஒன்றும் புரியாமல் நடிகர் அலெக் பால்வின் மற்றும் படப்பிடிப்பிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு உடனே இருவரையும் மீட்டு ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஒளிப்பாதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகக் கூறினர். கவலைக்கிடமான நிலையில் இயக்குநர் ஜோயல் சோஸாவுக்கு தீவிரமாக மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். படப்பிடிப்பு தளத்தில் எப்படி டம்மி துப்பாக்கிக்குப் பதில் நிஜத் துப்பாக்கி வந்தது என்பது குறித்து போலிஸார் படக்குழுவினரிடமும், நடிகர் அலெக் பால்ட்வின்னிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: துப்பாக்கி கலாச்சாரத்தின் பின்னணியில் அமெரிக்கா.. வரலாறு என்ன? - பகீர் தகவல்!