Cinema
நயன்தாரா படத்தில் ஹீரோவாக நடிக்கும் கவின் - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சின்னத்திரையில் கலக்கி வந்த நடிகர் கவின், சில சீரியல்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து, சினிமாவில் களமிறங்கிய அவர், நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தியிருந்தார்.
அதன்பிறகு, படவாய்ப்புகள் இன்றித் தவித்த அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அதிகப்படியான ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தார். தற்போது, இவர் நடிப்பில் வெளியாகியுள்ள லிஃப்ட் திரைப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதன்காரணமாக, பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். அந்த வகையில், நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் சார்பில், படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
இப்படத்தில், கவினுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பிற தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- கார்த்திகேயன்
Also Read
-
”தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும்” : ஆர்.என்.ரவி கேள்விக்கு நெத்தியடி பதில் தந்த முரசொலி!
-
2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
-
தீபாவளி பண்டிகை : தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 20,378 பேருந்துகள் இயக்க முடிவு !
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !