Cinema
விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வெளியானது ‘தளபதி 66’ அப்டேட்! #Thalapathy66
நடிகர் விஜய் தற்போது 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார். மேலும் சன் பிக்சர்ஸ் இந்த தயாரித்துள்ளது. மேலும் விஜயுடன் பூஜாபூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர்.
'பீஸ்ட்' நடிகர் விஜயின் 65வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இந்த படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதால் 'பீஸ்ட்' பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை அடுத்து நடிகர் விஜய், எந்த இயக்குநருடன் இணையப் போகிறார் என்ற தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், இன்று அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அது என்னவென்றால், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 66’ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. ‘தளபதி 66’ படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில், இயக்குநர் வம்சி இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு 'தளபதி 66' என தற்போதைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான பூஜையை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர் விஜய் அடுத்தப்படம் குறித்தான அப்டேட் கிடைத்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?