Cinema
“மொபைல்ல பார்க்கும்போது இப்படி ‘திக்கு’ திக்குன்னு இருக்கே..”: திகிலூட்டும் கவினின் ‘லிஃப்ட்’ ட்ரைலர்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் கவின். கதாயாகன் எனத் தொடர்ந்து ‘நட்புனா என்னனு தெரியுமா’ படத்தின் நாயகனாக அறிமுகமானர் கவின். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி பிரபலம் ஆனார். இதனையடுத்து கவின், வினித் இயக்கத்தில் ‘லிஃப்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தின் அனைத்துப்பணிகளை முடிந்து உள்ள நிலையில், மோஷன் போஸ்டரை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், அஜய் ஞானமுத்து, வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், ரவிக்குமார் ஆகியோர்நேற்று வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து இன்று படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
படத்தின் ட்ரைலரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்த பாடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த நிலையில், ‘லிஃப்ட்’ படம் நேரடியாக வரும் அக்டோபர் 1 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
மேலும் இந்த படத்தின் ட்ரைலரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!