Cinema

“திகில் படங்களை பார்த்தால் ரூ.95,000 பரிசு” : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் - சவாலுக்கு ரெடியா?

அமெரிக்காவைச் சேர்ந்த FinanceBuzz என்ற நிதி நிறுவனம் ஒன்று 13 அதிபயங்கரமான திகில் படங்களைப் பார்க்கும் நபர்களுக்கு 1,300 டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.95 ஆயிரம்) வழங்குவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் திகில் படங்கள் பார்வையாளர்களை அதிகம் பாதிக்கப்படுகிறதா? அல்லது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கும் படம் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா? என்பதைக் கண்டுபிடிக்கவே இந்த ஆய்வு செய்யப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு அவர்களது இதய துடிப்பை கண்காணிக்கும் விதமாக ஃபிட்பிட்டைப் பயன்படுத்தப்படும். இதன் மூலம் அவர்களது இதயத் துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும். போட்டியாளர்கள் 10 நாட்களில் 13 திகில் படங்களைப் பார்ப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சவாலுக்கான அனைத்து திரைப்படங்களின் வாடகை செலவுகளையும் ஈடுசெய்ய FitBit நிறுவனம் $ 50 தொகையைப் பங்கேற்பவர்களுக்கு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் படிவம் ஒன்றைப் பூர்த்தி செய்து ஏன் இந்த போட்டிக்குத் தகுதியானவர் என்பதையும் குறிப்பிட வேண்டும். மேலும் செப்டம்பர் 26ம் தேதிக்குள் இதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள் பார்க்கக்கூடிய 13 திகில் படங்களின் பெயர்களையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. Saw, Amityville Horror, A Quiet Place, A Quiet Place Part 2, Candyman, Insidious. The Blair Witch Project. Sinister, Get Out, The Purge, Halloween (2018), Paranormal Activity, Annabelle இவைதான் அந்த படங்கள்.

Also Read: பச்சைக் கொடி காட்டிய கங்குலி; படமாகிறது தாதாவின் வாழ்க்கை - உற்சாகத்தில் ரசிகர்கள்!