Cinema
'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்.. குதிரைகளை தடுத்து நிறுத்திய உ.பி போலிஸ் : நடந்தது என்ன?
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை மணிரத்னம் படமாக எடுத்து வருகிறார். இதன் அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தின் மீதான ஆர்வம் திரைப்பட ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, 'பொன்னியின் செல்வன்' வாசகர்களிடமும் அதிகரித்துள்ளது. இதனால் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் வட மாநிலங்களில் உள்ள கோட்டைகளில் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அண்மையில் 'பொன்னியின் செல்வன்' நாவலில் வரும் பாத்திரங்களில் யார் யார் எந்தெந்த வேடங்களில் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பும் வெளியானது இன்னும் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஓர்ச்சாவி கோட்டையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இந்தப் படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் தொடர்பான காட்சிகள் இணையத்தில் கசிந்தன. இதைப் பார்த்துப் படக்குழுவும் அதிர்ச்சியடைந்தது.
இந்தப் படத்திற்கு போர்க்காட்சிகளுக்குக் குதிரைகள் அதிகம் தேவைப்பட்டதால், சென்னையிலிருந்து உத்தர பிரதேசத்திற்கு 18 குதிரைகள் சென்றன. இந்தக் குதிரைகள் ஜான்சி சாலை அருகே சென்றபோது அங்கிருந்த போலிஸார் குதிரைகள் வந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர்.
மேலும் இந்தக் குதிரைகள் குறித்த தகவல்களை போலிஸார் உயர் அதிகாரிகளுக்கு கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் குதிரைகளைக் கொண்டு வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து இயக்குநர் மணிரத்னத்திடமும் போலிஸார் தொடர்புகொண்டு பேசி படப்பிடிப்பிற்கு வந்த குதிரைகள்தான் என்பதை உறுதி செய்தனர்.
பின்னர், குதிரைகளைப் படப்பிடிப்பு தளத்திற்கு கொண்டு செல்ல போலிஸார் அனுமதி கொடுத்தனர். இதையடுத்து குதிரைகள் 'பொன்னியின் செல்வன்' படக்குழுவுடன் இணைந்தன. உத்தர பிரதேசத்தில் படப்பிடிப்பிற்காகச் சென்ற குதிரைகளைத் தடுத்து நிறுத்திய சம்பவம் படப்பிடிப்பு தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!