Cinema
ஷங்கர் படத்தில் வில்லனாகும் ஃபகத் ; ஆர்.ஆர்.ஆர். ரிலீஸ் திட்டத்தில் மீண்டும் மாற்றமா..? சினி அப்டேட்ஸ்!
ஆர்.ஆர்.ஆர். ரிலீஸ் திட்டம் மாற்றமா..?
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இதில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் சமுத்திரகனி, அஜய் தேவ்கன், பிரியாமணி, ரம்யா கிருஷ்ணன், ஆலியா பட், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.
400 கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்த படத்தை வரும் அக்டோபர் 13ஆம் தேதி உலகமுழுக்க 10 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. நீண்ட காலங்களாக நடைப்பெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி அறிவிக்கப்படலாம் என டோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. இதற்கு காரணமாக தியேட்டர்கள் மூடியுள்ளதை சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஷங்கர் படத்தில் வில்லனாகும் ஃபகத்
தெலுங்கு நடிகர் ராம் சரணை இயக்க தயாராகி வருகிறார் இயக்குநர் ஷங்கர். ‘ராம் சரண் 15’வது படமாக உருவாகிவரும் இந்த படத்தில் ராம் சரண் ஜோடியாக நடிகை ஆலியா பட் நடிக்கவுள்ளார். மேலும் கொரியன் நாயகி பே சுசி நடிப்பதும் உறுதியாகியுள்ளது. இது தவிர அஞ்சலி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதில் வில்லனாக ஃபகத் பாசில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!