Cinema
இணையத்தை கலக்கும் ‘கூகுள் குட்டப்பா’ ; பிரபல மலையாள படத்தை ரீமேக் செய்கிறார் ஸ்டைலிஷ் இயக்குநர்!
இணையத்தை கலக்கும் ‘கூகுள் குட்டப்பா’ ஃபர்ஸ்ட் லுக்..
கடந்த 2019ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இதில் தந்தையாக சுராஜ், மகனாக சோபின் நடித்திருந்தனர். மனித உணர்வையும், இயந்திரங்களின் வரவையும் பற்றி பேசியிருந்த இந்த படத்தை தமிழில் ‘கூகுள் குட்டப்பா’ எனும் தலைப்பில் ரீமேக் செய்து வருகின்றனர்.
பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிகுமார் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தயாரித்து நடித்து வருகிறார். தர்ஷன், லொஸ்லியா மற்றும் யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சபரிகிரீசன் மற்றும் குரு சரவணன் என்ற இரட்டை இயக்குனர்கள் இந்த படத்தை இயக்கி வருகின்றனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிடிருந்தார், ரோபோ உடன் கே.எஸ்.ரவிகுமார் இருக்கும் அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலையாள படத்தை ரீமேக் செய்யவிருக்கும் கௌதம் மேனன்..
கோலிவுட்டில் இயக்குனராக முத்திரைப் பதித்து தற்போது பிஸியான நடிகராக கலக்கி வருகிறார் கௌதம் மேனன். இவர் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘நாயட்டு’ படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்க இருப்பதாகக் ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது.
மலையாளத்தில் மார்ட்டின் பிரக்டின் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘நாயட்டு’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்செயலாக ஒரு குற்றத்தில் ஈடுபட்ட பின்னர் தப்பியோடும் 3 போலீஸ்காரர்களின் போராட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தின் தமிழ் மற்றும் இந்தி ரீமேக் உரிமைகளுக்கு அதிக போட்டி வந்தது. தற்போது நாயட்டு படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் கௌவுதம் மேனன் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!