Cinema
Valimai Update: ”சும்மா செய்றோம்” யுவன் பேச்சை பகிர்ந்து ட்ரெண்ட் செய்யும் அஜித் ரசிகர்கள்!
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அஜித் நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு தயாரகிக் கொண்டிருக்கும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்ஷன் படமான இது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.
2 ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டது பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு பெருவாரியான வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது.
இந்த நிலையில் வலிமை படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இன்று இரவு 10 மணியளவில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள வலிமை படத்தின் முதல் சிங்கிள் வெளியாகவிருக்கிறது.
இது யுவன் முன்பே கூறிய அம்மா செண்டிமெண்ட் பாடலாக இருக்குமா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இது போக, இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி இசையமைப்பாளர் அனிருத் பாடியிருப்பார் என்றும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதனிடையே #ValimaiFirstSingle என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
Also Read
-
ஏன் வெளியே சென்றார்கள் : ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் - பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!
-
பீகார் தேர்தல் - பா.ஜ.க ஆசையில் மண்ணைப் போட்டது 'இந்தியா' கூட்டணி : முரசொலி!
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!