Cinema
மகாபலிபுரத்தில் விஜய்யின் 'பீஸ்ட்' ஷூட்டிங்... செல்வராகவன் படத்தின் டைட்டில் மாற்றம்? #CINEUPDATES
மகாபலிபுரத்தில் துவங்கியது ‘பீஸ்ட்’ பட ஷுட்டிங்..!
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இதற்கிடையில் பீஸ்ட் படத்தின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்புக்காக சென்னையில் செட் போடப்பட்டு வந்த நிலையில், இப்போது பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் நாயகி பூஜா ஹெக்டேவும் இணைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இங்கு பாடல் காட்சியுல் சில முக்கியமான காட்சிகளும் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செல்வராகவனின் ‘நானே வருவேன்’ டைட்டில் மாற்றம்?
தமிழ் சினிமாவில் செல்வராகவன்-தனுஷ் கூட்டணியில் வெளியாகும் படங்கள் எப்போதும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றியடையும். அந்த வகையில் 4வது முறையாக இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படம் தான் ‘நானே வருவேன்’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் ‘நானே வருவேன்’ படத்தின் தலைப்பு மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி படப்பிடிப்பு துவங்கவிருக்கும் நிலையில் படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!