Cinema
‘அவதார் 2’ ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? : விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
2009ல் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக வெளியான படம் ‘அவதார்’. உலகமெங்கும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இதன் அடுத்தடுத்த பாகங்களையும் உருவாக்க முடிவு செய்து அதற்கான பணிகளை துவக்கியிருந்தார் ஜேம்ஸ் கேமரூன்.
கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் பணிகள் பல பிரச்னைகளை சந்தித்து நடந்து கொண்டிருக்கிறது. அவதார் 2, அவதார் 3 என வரிசையாக படங்களின் ரிலீஸை அறிவித்த ஜேம்ஸ் கேமரூனால் சரியான நேரத்தில் படத்தை முடிக்க முடியாத நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
இடையே இந்த கொரோனா ஊரடங்கின் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டதில் அவதார் படத்தின் செட்கள் சேதமடைந்தன, அதை மீண்டும் சரி செய்து ஜேம்ஸ் கேமரூன் தற்போது ஷூட்டிங் நடத்தி வருகிறார். 2018, 2020 என ஏற்கனவே ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட இந்தப் படம் இந்த ஆண்டு டிசம்பரில் திரைக்கு வரும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த முறையும் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவே ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘அவதார் 2’ படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவடைந்திருந்தாலும் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் தாமதமாவதால் படத்தை 2022 டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் செய்ய கேமரூன் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!