Cinema
கதை பிடிக்காததால் இயக்குநர் வம்சியைத் தவிர்க்கும் நடிகர் விஜய்?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் தொடங்க இருக்கிறது. சென்னையில், பிரம்மாண்டமான மால் செட் போட்டு படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்.
இந்நிலையில், இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படம் பற்றிய செய்திகள் உலாவருகிறது. அதன்படி, தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்க விஜய் நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இயக்குநர் வம்சி அளித்த ஒரு பேட்டியில் கூட இதைக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இப்போது விஜய் அந்த இயக்குநரோடு பணிபுரிய மாட்டார் என சொல்கிறது கோலிவுட் வட்டாரம்.
ஏன் என்றால், இயக்குநர் வம்சி, முழுக்கதையும் சொல்லாமல் மையக்கதை மற்றும், படம் எப்படி இருக்கப் போகிறது என மட்டும் தான் சொல்லிருக்கிறார். அதில், முழுமையா திருப்தி அடையாத விஜய், முழு திரைக்கதையை உருவாக்குங்கள் என சொல்லி இருக்கிறார். அவரோ, திரைக்கதை உருவாக்கத்துக்கு முன்பாக அதைப்பற்றிப் பொதுவெளியில் பேசிட்டது, விஜய்க்கு சுத்தமா பிடிக்கவில்லையாம். அதனால், தெலுங்கு இயக்குநர் வேண்டாம் என விஜய் சொல்லிட்டடார் என தகவல்கள் உலவுகிறது
Also Read
-
“Computer Expert பழனிசாமியின் கனவு பலிக்காது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!
-
#VBGRAMG - மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் : எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
நாடு முழுவதும் எத்தனை தபால் அலுவலகங்கள் மூடப்பட்டன? : நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு MP கேள்வி!
-
அமெரிக்க வரிவிதிப்பு : விரைவில் தீர்வு காண வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
காந்தியின் ராமராஜ்யமும், பா.ஜ.கவின் வதை ராஜ்யமும் : தெள்ளத் தெளிவாக விளக்கிய முரசொலி!