Cinema
‘விஜய் 66’ படத்தை இயக்கப்போவது யார்? - வம்சியின் த்ரில்லர் கதைக்கு ஓகே சொன்னாரா விஜய்?
நடிகர் விஜய் இப்போது ‘விஜய் 65’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்65 படத்துக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்தான், நடிகர் விஜய் நடிக்கப்போகிறார் என தகவல் வெளியானது.
இந்நிலையில் விஜய் 66 படத்தை இயக்கவிருப்பது தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் வம்சி என தகவல் உலவியது. இப்போது அதில் மேலும் ஒரு முக்கியமான அப்டேட் வந்திருக்கிறது. அது என்னவென்றால் சமீபத்தில் இந்தப் படத்துக்கான கதையை இயக்குனர் வம்சி, நடிகர் விஜய்யிடம் ஸ்கைப் மூலமாக ஆன்லைனில் சொல்லியிருக்கிறாராம்.
இதுபற்றி பேசியிருக்கும் இயக்குநர் வம்சி விஜய்யிடம் அதிரடியான த்ரில்லர் கதையைச் சொன்னதாவும், அந்த கதை விஜய்க்கு ரொம்ப பிடித்துப் போய்விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தயாரிக்கப் போகிறார் என்ற தகவலும் உலவுகிறது. இது நேரடித் தெலுங்குப் படமா, தமிழ் தெலுங்கு பைலிங்குவலா என பல கேள்விகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால்தான் பதில் தெரியும்.
Also Read
-
ED-க்கு ரூ.2 லட்சம் அபராதம் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
”எங்கள் பேரணியை பார்த்து பா.ஜ.க பயத்தில் உள்ளது” : RJD தலைவர் தேஜஸ்வி பேட்டி!
-
“தமிழ்நாடு மக்களின் அன்போடு புறப்பட்டுச் செல்கிறேன்!” : பயணத்தின் தொடக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் : அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்!
-
ஜெர்மனி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! : ஒரு வார கால அரசுமுறைப் பயணம்!