Cinema
இரண்டாவது அலை எதிரொலி: ஓடிடியில் ஐக்கியமாகும் தமிழ் படங்கள் - வெளியானது புதிய தகவல்!
தமிழ் சினிமா மெல்ல மெல்ல நேரடி ஓடிடி ரிலீஸுக்கு பழக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழல் இது. ஏற்கெனவே சூர்யாவின் சூரரைப் போற்று வெளியானது, அடுத்து தனுஷின் ஜகமே தந்திரம் படம் வெளியாக இருக்கிறது. இன்னும் ஏராளமான சின்னப் படங்கள் வெளியானது.
இப்போதைய சூழலை கருத்தில் கொண்டு பல பெரிய படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட தயாராகிக் கொண்டிருக்கிறது. அப்படி அடுத்த கட்டமாக ஓடிடியில் சில படங்கள் வர தயாராவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் டாக்டர். முதலில் இந்தப் படம் மார்ச் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் , தேர்தல் சமயமாக இருந்ததால் படத்தை மே மாதத்திற்கு மீண்டு தள்ளிவைக்கப்பட்டது.
இப்போது இந்தப் படம் தியேட்டரிலேயே வராது நேரடியாக அமேஸான் ப்ரைமில் வர இருக்கிறது என சொல்லப்படுகிறது. டில்லி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி - பார்த்திபன் நடித்திருக்கும் படம் `துக்ளக் தர்பார்'. இந்தப் படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
நயன்தாரா நடிப்பில் `ப்ளைன்ட்' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான படம் `நெற்றிக்கண்'. `அவள்' படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கியிருக்கும் படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கிறார்.
த்ரிஷா நடித்து சமீபத்தில்தான் `பரமபதம் விளையாட்டு' ஹாட்ஸ்டாரில் வெளியானது. அதே ஹாட்ஸ்டாரில் த்ரிஷாவின் `ராங்கி' படத்தையும் வெளியிட இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!