Cinema
டோலிவுட்டையும் ஆக்கிரமித்த ஓ.டி.டி. : ரிலீசுக்கு காத்திருக்கும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்!
கொரோனா காரணமா திரைப்படங்கள், ஓடிடிக்குப் போவதும், ரிலீஸ் தள்ளிப்போவதும் இப்போது வாடிக்கையான ஒன்றாகவே மாறிவிட்டது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் தொடர்ந்து டோலிவுட்டிலும் பெரிய ஹீரோக்களின் படங்களின் ரிலீஸ் தள்ளிப்போகிறது. தற்போது இதை அதிகாரப்பூர்வமாக மூன்று படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.
முதல் படம் நானி, ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெகபதிபாபு, நாசர், ரோகினி எனப் பலரும் நடித்திருக்கும் `டக் ஜகதீஷ்'. இந்தப் படம் ஏப்ரல் 23ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால், இப்போது தேதி எதுவும் சொல்லப்படாமல் படம் தள்ளிப்போகிறது என நானியே ஒரு வீடியோ அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அடுத்த படம், ராணா - சாய் பல்லவி, ப்ரியாமணி, நந்திதா தாஸ், ஈஸ்வரி ராவ் எனப் பலரும் நடித்திருக்கும் `விராத பர்வம்'. இது ஏப்ரல் 30ம் தேதி வெளியாக இருந்தது. இதுவும் புது ரிலீஸ் தேதி சொல்லப்படாமல் தள்ளிப்போகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாக சைதன்யா, சாய் பல்லவி, ராவ் ரமேஷ், போசானி கிருஷ்ணா எனப் பலரும் நடித்து ஷேகர் கம்மூலா இயக்கியிருக்கும் படம் `லவ் ஸ்டோரி'. இந்தப் படம் ஏப்ரல் 16ம் தேதி, அதாவது இன்று ரிலீஸ் ஆகவதாக இருந்தது. கூடவே படத்தின் பாடல்கள் பெரிய ஹிட்டானதால் படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், கோவிட் காரணமா இந்தப் படமும் தள்ளிப் போகிறது என பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து அறிவித்திருக்கின்றனர். இதில் எந்தெந்த படங்கள் எப்போது வரும், எதாவது ஓடிடில ரிலீஸ்க்கு செல்கிறதா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Also Read
-
மோன்தா புயல் : சென்னை - ஆந்திரா இடையே 9 விமானங்கள் ரத்து!
-
சென்னையில் விடிய விடிய மழை! : நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீராய்வு!
-
“வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
மருத்துவ திட்டங்களால் மக்களை பாதுகாத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : முரசொலி புகழாரம்!
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !