Cinema
ஆதிபுருஷ்-க்கு பிறகு மாஸ்டர் இயக்குநருடன் இணையும் பிரபாஸ் : சைக்கிள் கேப்பில் கதை கூறிய லோகேஷ்!
சத்யராஜ், வரலட்சுமி நடித்த `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்', நயன்தாரா நடிப்பில் `ஐரா' ஆகிய படங்களை இயக்கியவர் சர்ஜூன். இதற்கு முன்பு இவர் இயக்கிய `லட்சுமி' `மா' ஆகிய குறும்படங்கள் மூலம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர் இயக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.
சர்ஜூன் அடுத்து இயக்கும் படத்தில் `மெட்ரோ', `ராஜா ரங்குஸ்கி' படங்களில் நடித்த சிரிஷ் நடிக்கிறார். நாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் ப்ரியா ஒரு டிவி ரிப்போர்ட்டராக நடிக்கிறார் என்றும், ஒரு கொலையை பற்றிய வீடியோ மூலம் அதை செய்தது யார் என கண்டுபிடிப்பதுதான் கதை என்றும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் ராமேஷ்வரத்தில் துவங்கி, சில காட்சிகள் ஷூட் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் பற்றிய கூடுதல் தகவல்களும், அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2017ல் வெளியான மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்தின் மூலமே, பலரது கவனத்தையும் ஈர்த்தார். இரண்டாவதாக இவர் இயக்கி கார்த்தி நடித்த `கைதி' படமும் மிகப்பெரிய வெற்றிப் படமானது. விஜய் நடிக்க இவர் இயக்கிய `மாஸ்டர்' படம் மூலம் கோலிவுட்டின் சென்ஷேசனாக மாறினார். இப்போது கமல் நடிப்பில் `விக்ரம்' படத்தை இயக்கும் வேலைகளில் இருந்தார். சமீபத்தில் கோவிட் பாதிப்புக்குள்ளனதால், அதற்கான சிகிச்சைகளை பெற்று குணமாகியிருக்கிறார்.
இந்த சூழலில் லோகேஷின் அடுத்த படம் பற்றிய தகவல் பரபரப்பாக பரவி வருகிறது. மாஸ்டர் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கான ப்ரமோஷன் வேலைகளுக்காக ஹைதராபாத் சென்றிருந்தார் லோகேஷ். அந்த சமயத்தில் நடிகர் பிரபாஸை, லோகேஷ் சந்தித்ததாகவும், அப்போது அவருக்கு ஒரு கதையை லோகேஷ் சொன்னதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. தற்போது பிரபாஸ் `ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கடுத்து கே.ஜி.எஃப் இயக்குநர், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்திலும், இந்தியில் ஓம் ராவத் இயக்கும் `ஆதிபுருஷ்' படத்திலும் நடிக்க இருக்கிறார் பிரபாஸ். லோகேஷும் கமல் நடிப்பில் `விக்ரம்' படத்திற்கான வேலைகளில் இருக்கிறார். இந்த இருவரும் இணைவார்களா? என்ற பெரிய எதிர்பார்ப்பு இப்போது எழுந்திருக்கிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வருமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Also Read
-
ராணிப்பேட்டை - 72,880 நபர்களுக்கு ரூ.296 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
35 மீனவர்கள் கைது : ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தருமபுரி - ரூ.39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !