Cinema
ரிலீசுக்கு தயாரானது த்ரிஷாவின் ‘பரமபதம்’ ; நடிகராகவே களமிறங்கும் நிவின் பாலி - சினி பைட்ஸ்!
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் நிவின் பாலி. மலையாளம் தாண்டி தமிழிலும் சில படங்கள் நடித்திருக்கிறார். மூத்தோன் படம் மூலம் இந்தியிலும் அறிமுகமானார். தற்போது இவர் நடிப்பில், மலையாளத்தில் `படவெட்டு', `துறமுகம்', ரிலீஸுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறது. தற்போது இவர் நடிக்கும் இன்னொரு மலையாளப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நிவின்.
`தாரம்' எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை வினய் கோவிந்த் இயக்குகிறார். இதற்கு முன்பு இவர் இயக்கிய `கிளி போயி' 'கோகினூர்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பு பெற்றவை. அதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஒரு நடிகராகவே வர இருக்கிறார் நிவின் பாலி. ஆனால் இது சினிமா பற்றிய படம் இல்லை, வாழ்வைப் பற்றிய படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது நிவின் பாலி தவிர வேறு எந்த நடிகரும் முடிவாகவில்லை.
நிவின் நடிப்பில், ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் `கனகம் காமினி கலஹம்', அப்ரித் ஷைன் இயக்கத்தில் `மகாவீர்யர்' ஆகிய படங்கள் உருவாக இருக்கிறது. இந்தப் படங்களையடுத்து `தாரம்' படத்தில் நடிக்க இருக்கிறார். இதனைப் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. இவர் நடிப்பில் 2019ல் ரஜினியின் `பேட்ட' படமும், 2020ல் கௌதம் மேனன் இயக்கிய `கார்த்திக் டயல் செய்த எண்' குரும்படமும் வெளியானது. அதன் பிறகு த்ரிஷா நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. தற்போது த்ரிஷா நடித்துள்ள ஒரு படம் வெளியாக இருக்கிறது.
திருஞானம் இயக்கியுள்ள `பரமபதம் விளையாட்டு' படம் வெளியீட்டுக்கு தயாராக இருந்து பல முறை ரிலீஸ் தேதியில் மாற்றம் நடந்துகொண்டே இருந்தது. அதன் பிறகு கொரோனா காரணமாக தியேட்டர் ரிலீஸ் என்பதை தள்ளி வைத்துவிட்டு, படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அதன்படி இந்தப் படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.
ஏப்ரல் 14ம் தேதி இந்த படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் தவிர த்ரிஷா நடிப்பில், `கர்ஜனை', `சதுரங்க வேட்டை 2', `ராங்கி' ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இது தவிர மணிரத்னத்தின் `பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதை முடித்ததும் மலையாளத்தில் மோகன்லாலுடன் `ராம்' படத்தில் நடிக்க இருக்கிறார்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?