Cinema
விஜய் சேதுபதி படத்தைத் தொடர்ந்து ‘மாநாடு’ படத்தில் இணைந்த குக் வித் கோமாளி புகழ் : ரசிகர்கள் கொண்டாட்டம்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் ‘மாநாடு’'. பல தடைகளுக்குப் பிறகு இதன் படப்பிடிப்புகள் திட்டமிட்ட படி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்திற்காக வெளியிடப்பட்ட டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
மேலும் டெனட் படத்தை ஒப்பிட்டு மீம்ஸ் வந்தது, அதற்கு வெங்கட் பிரபுவின் ரிப்ளே எல்லாம் நாம் அறிந்ததே. தினமும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. சிம்பு படப்பிடிப்பின் இடைவேளையின் போது தரையில் படுத்து ஓய்வெடுத்த படம் கூட வைரலானது.
இப்போது படத்தைப் பற்றிய புதுத் தகவல், இதில் முக்கிய கதாபாத்திரத்திற்காக`குக் வித் கோமாளி' புகழ் இணைந்திருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சிம்புவும் புகழும் பேசிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படமும் வெளியானது.
ஏற்கெனவே புகழ், விஜய் சேதுபதி - பொன்ராம் இணையும் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்திலும் நடிப்பதை சமீபத்தில் அறிவித்தனர். கூடவே வலிமை படத்திலும் அவர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இது போக விஜய் 65யில் கூட புகழ் இணைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?