Cinema
“ஒரு தனிமனிதனுக்கான அநீதி நாட்டுக்கே துரோகமாகும்” - மாதவனின் ராக்கெட்ரி ட்ரெய்லர் வெளியீடு!
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரி நம்பி நாராயணன். இவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைத் தழுவி உருவாகும் படம்தான் `ராக்கெட்ரி தி நம்பி எஃபக்ட்'.
இதில் நம்பி நாராயணனாக நடித்து படத்தையும் இயக்கியிருக்கிறார் மாதவன். இந்தப் படம்தான் இவர் இயக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கிறது படம்.
சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல் எனப் பலரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் தமிழ் வெர்ஷனில் சூர்யாவும், இந்தி வெர்ஷனில் ஷாரூக்கானும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.
தற்போது இந்தப் படத்தில் புது அப்டேட், இன்று மாலை இந்தப் படத்தின் டிரெய்லரை வெளியிட்டிருக்கிறார்கள் என்பதுதான். டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சாம் சி.எஸ்.
மாதவன் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான `மாறா' நேரடியாக ஓடிடியில் வெளியானது. இப்போது ராக்கெட்ரி படத்தை திரையரங்கில் வெளியிட தீவிரமாக வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் இதன் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கிறது விஜய் 65 படம். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவிருக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் பூஜை நேற்று தொடங்கியது.
முதற்கட்ட படபிடிப்பாக சென்னையில் 2 நாட்கள் நடைபெற இருப்பதாகவும் தேர்தலுக்கு பின்னர் படக்குழு ஐரோப்பியாவுக்கு செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விஜய் 65 படத்தின் பூஜையின் போது வளர்ந்து வரும் நடிகராக உள்ள கவின் பங்கேற்றிருப்பது சமூக வலைதளத்தில் பேசு பொருளாகியுள்ளது. இதையடுத்து, கவினும் விஜய் 65யில் நடிக்கிறார் என செய்திகள் பரவியது.
ஆனால், இந்தப் படத்தில் கவின் நடிக்கவில்லை எனவும், நெல்சன் இதற்கு முன் இயக்கியிருந்த `டாக்டர்' படத்தில் கவின் உதவி இயக்குநராக பணியாற்றியதால் அந்த நட்பின் காரணமாக இந்த நிகழ்வில் கலந்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
கவின் ஹீரோவாக `லிஃப்ட்' படத்தில் நடித்திருக்கிறார், இதில் பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இது விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘‘இதுதான் RSS, பாஜக ஆட்சி” - முஸ்லிம்களுக்கு மகப்பேறு பார்க்க மறுத்த உ.பி. அரசுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க e-marketplace... தமிழ்நாடு அரசு அசத்தல் அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் நெல் சாகுபடி” -அமைச்சர் MRK பன்னீர்செல்வம் விவரங்களுடன் அறிக்கை!
-
“முஸ்லீம்-குலாம் சிகிச்சை பார்க்க முடியாது..” -கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்த உ.பி அரசு மருத்துவர்!
-
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நியமனம் - அமைச்சர் கோவி.செழியன் !