Cinema
விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்த சிம்பு... ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர் விஜய் சேதுபதி. தற்போது கோலிவுட்டில் அதிக படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் நடிகரும் இவரே. ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம், கெஸ்ட் ரோல் என எதுவானாலும் நடித்து பாராட்டு பெற்று வருகிறார். இவர் ஹீரோவாக நடித்திருக்கும் பல படங்களில் ஒன்று `யாதும் ஊரே யாவரும் கேளீர்'.
சமீபத்தில் மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. தற்போது இந்தப் படத்திலிருந்து முதல் சிங்கிள் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.`முருகா' என்ற இந்தப் பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார். மோகன் ராஜன் எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா.
இந்தப் படத்தின் வெளியீட்டு வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதுதவிர விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன், கடைசி விவசாயி, லாபம், முகிழ், மணிரத்னத்தின் ஆந்தாலஜி `நவரசா'வில் பிஜோஜ் நம்பியார் இயக்கத்தில் ஒரு படம் என படங்கள் தயாராக இருக்கிறது.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடம், தீபக் சுந்தர்ராஜன் இயக்கதில் ஒரு படம், மாநகரம் இந்தி ரீமேக் எனப் பல படங்களில் பணியாற்றி வருகிறார்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!