Cinema
'வலிமை’ படத்திற்காக ‘வெய்ட்’ குறைத்த அஜித் : ரசிகர்களுடன் எடுத்த புகைப்படத்தில் அஜித்தின் கையில் தழும்பு!
'வலிமை' படத்தின் ஷூட்டிங் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
எனவே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ‘வலிமை’ படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார். படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், ராமோஜி பிலிம் சிட்டியில் மீண்டும் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றது.
அந்த புகைப்படங்களில் நடிகர் அஜித் ஸ்லிம் லுக்கில் உள்ளார். வலிமை படத்திற்காக உடல் எடையைக் குறைத்துள்ளதால் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் அந்த புகைப்படங்களில் அஜித்தின் கையில் தழும்பு ஒன்று தெரிகிறது. அது ‘வலிமை’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
எனவே இந்த தழும்பைக் குறிப்பிட்டுப் பதிவிட்டு வரும் ரசிகர்கள், ”ரிஸ்க் எடுக்க வேண்டாம் தல” என அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே #Valimai ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!