Cinema
அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் தொடங்கியது... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக பணிபுரிகிறார். கொரோனா அச்சுறுத்தலால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நடிகர் அஜித்தின் வலிமையின் படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது மற்றும் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு புகைப்படத்தில், இயக்குனர் எச்.வினோத் ‘வலிமை’ பட செட்களில் மக்களுக்கு அறிவுறுத்துவதைக் காணலாம். சில போலிஸ் வேன்களையும் செட்டில் காணலாம்.
சென்னை படப்பிடிப்பில் அஜித் ‘வலிமை’ குழுவில் சேரவுள்ளார். தகவலின் படி, இந்த படப்பிடிப்பு சுமார் 15 நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வலிமை படப்பிடிப்பு தளத்திலிருந்து சில புகைப்படங்கள் இங்கே :
இதற்கிடையே, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா குமகொண்டா நேற்று (செப்டம்பர் 23) ஹைதராபாத் விமான நிலையத்தில் காணப்பட்ட நிலையில், எச்.வினோத் இயக்கிய ‘வலிமை’யில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவியுள்ளது. இருப்பினும், ‘வலிமை’ படத்தின் டீம் இதை உறுதிப்படுத்தவில்லை.
Also Read
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!