Cinema
நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி... சீமானும், ஹரி நாடாரும் அவமானப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு!
சீமான் மற்றும் ஹரி நாடார் தன்னை அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்து கொள்ள போவதாகக் கூறி ரத்த அழுத்த மாத்திரைகளை அதிக அளவில் எடுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.
சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்த நடிகை விஜயலட்சுமி அண்மைக்காலங்களாக சீமான் குறித்து பல்வேறு காட்டமான விமர்சனங்களை முன்வைத்து ஃபேஸ்புக்கில் வீடியோவாகவும் நேரலையாகவும் பேசி வந்தார்.
இந்த நிலையில் சீமானுக்கு ஆதரவாக, ஹரி நாடார் தன்னை சாதி ரீதியிலும், தனிமனித ரீதியிலும் புண்படுத்தும்படி பேசியதாக குற்றஞ்சாட்டி புதிதாக வீடியோ ஒன்றினை வெளியிட்டார் நடிகை விஜயலட்சுமி. சீமான் மீதும் ஹரி நாடார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர் “என்னால் வாழ முடியவில்லை, என்னுடைய மரணத்துக்கு நாம் தமிழர் கட்சியின் சீமானும், ஹரி நாடாருமே காரணம்” எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து, குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக மயக்கமடைந்த விஜயலட்சுமி சென்னை அடையார் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அவசர பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சிமியின் சகோதரி உஷா, “சீமான் தரப்பில் கடந்த 4 மாதங்களாக எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக எங்களை ஹரி நாடார் கொச்சையான வார்த்தைகளில் பேசி மிரட்டி வருகிறார்.சீமானை யாரும் எந்த கேள்வியும் கேட்க வில்லை.
சீமானை பார்த்த நாள் முதல் எங்கள் குடும்பம் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. அனைத்து இடங்களிலும் ஆட்களை வைத்து மிரட்டல் விடுக்கிறார் சீமான். சமுக வலைதளங்களில் சீமானின் தூண்டுதலின் பேரில் எங்களை பற்றி தவறாக பேசி பலர் மிரட்டல் விடுகின்றனர். மார்ச் 8 ஆம் தேதி காவல் நிலையத்தில் சீமான் மீது புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
10 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அளவு நிலைமை மோசமகியிருக்காது. ஆனால் அந்த வழக்கையும் எங்களை மிரட்டி சீமான் திரும்ப பெற வைத்தார்.” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!