Cinema
மீண்டும் முற்றிய வடிவேலு-சிங்கமுத்து விவகாரம்: நடிகர் சங்கத்தில் அவதூறு புகார்!
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத, மறுக்கப்படாத அடையாளமாக இருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. கடந்த 2 ஆண்டுகளாக திரையில் தோன்றாவிட்டாலும், சமூக வலைதளங்களில் பரவும் மீம்ஸ்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
அவ்வப்போது, பேட்டிகளில் மட்டுமே தென்பட்டு, தனக்கே உரிய பாணியில் பேசி ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் நடிகர் வடிவேலு.
இந்நிலையில், கொரோனா காலம் என்பதால், வீடியோ கான்ஃப்ரன்ஸ் உள்ளிட்டவற்றின் மூலம் நடிகர்கள் பேட்டியளிப்பது வழக்கமாகி வருகிறது. அவ்வகையில், நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து வடிவேலு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சர்ச்சையை கிளப்பும் வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதனையறிந்த நடிகர் வடிவேலு கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி நடிகர்கள் சிங்கமுத்து மற்றும் மனோபாலா இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண் 13ன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தி புகார் கடிதம் ஒன்றை தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு எழுதியுள்ளார்.
ஏற்கெனவே சிங்கமுத்துவுக்கும், வடிவேலுவுக்கும் இடையே நிலம் தொடர்பான தகராறு இருக்கிறது. நீதிமன்றத்திலும் அந்த விவகாரம் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது இந்த வீடியோ விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!