Cinema
நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் ஐ.டி ரெய்டு - முன்கூட்டியே கணித்த ‘இவன் தந்திரன்’ !
'பிகில்' பட விவகாரம் தொடர்பாக நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதிரடியாக விஜய்யை அழைத்துச் சென்று அவரது வீட்டில் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தி சோதனை மேற்கொண்டது வருமான வரித்துறை. இது தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல, ‘பிகில்’ படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ் கல்பாத்தி அகோரத்துக்கு சொந்தமான இடங்களிலும், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அதில், ஏ.ஜி.எஸ் மற்றும் அன்புச்செழியனிடம் இருந்து கணக்கில் வராத ரூ.77 கோடி ரொக்கமும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் வீட்டில் 8க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டதாக வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருகிற 15ம் தேதி ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதை அடுத்து இன்று விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. முன்னதாக, ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரான லலித்குமாருக்கு சொந்தமான இடங்களில் நேற்று முன் தினம் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது.
‘பிகில்’, ‘சர்க்கார்’ பட இசை வெளியீட்டின்போது ஆளுங்கட்சியை விமர்சித்து விஜய் பேசியது அ.தி.மு.கவினரை கடுப்பேற்றியதால் இந்த முறை மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டை தடுப்பதற்காக ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் திட்டமிட்டுள்ளதாக கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் ‘இவன் தந்திரன்’ முன்கூட்டியே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!