Cinema
30 கோடியை பொதுசேவைக்குக் கொடுத்த ‘பாலம்’ கல்யாணசுந்தரம் வேடத்தில் நடிக்க அமிதாப் பச்சன் ஆசை !
இந்திய அளவில் வாழ்க்கை வரலாற்று சினிமாக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளிவந்துள்ளன. இந்த வரிசையில் சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கையும் படமாகிறது.
இவர் பாலம் அமைப்பு மூலம் சமூக சேவைப் பணிகள் செய்துவருகிறார். அமெரிக்காவில் வழங்கப்பட்ட ரூ.30 கோடி பரிசுத் தொகையை பொதுத்தொண்டுக்கே திருப்பி கொடுத்தார்.
ஆங்கிலத்தில் வெளியான பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை படித்த அமிதாப்பச்சன், அவரது வாழ்க்கை என்னை நெகிழச்செய்கிறது. அவரது வாழ்க்கை கதை படத்தில் நானே நடிக்கிறேன். பாலம் கல்யாணசுந்தரத்தின் இளமைக்கால கதாபாத்திரத்தில் எனது மகன் அபிஷேக்பச்சன் நடிப்பார் என்று இந்தி தயாரிப்பாளர் பரண் ஆதர்ஷிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து தயாரிப்பாளர் பரண் ஆதர்ஷ் சென்னை வந்து பாலம் கல்யாணசுந்தரத்தை சந்தித்து பேசி, பட வேலைகளைத் தொடங்கி உள்ளார். பாலம் கல்யாணசுந்தரத்தின் தாய் வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது. படத்துக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை பொதுத்தொண்டுக்கு வழங்க பாலம் கல்யாணசுந்தரம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!
-
அதானியை காப்பாற்ற 35 ஆயிரம் கோடி LIC நிதியை வழங்கிய ஒன்றிய பாஜக அரசு... அம்பலப்படுத்திய பிரபல நாளிதழ் !
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!