Cinema
இரண்டாவது சிங்கிள், ஆடியோ ரிலீஸ் அப்டேட்: விஜய் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்கும் ‘மாஸ்டர்’ டீம்!
அருண்ராஜா காமராஜ் எழுத்தில், விஜய் குரலில், அனிருத் இசையில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாடல் பட்டித்தொட்டியெங்கும் வைரலாகி சுமார் 17 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
வாழ்க்கைக்குத் தேவையான அட்வைஸும், தத்துவமும் கொடுக்கும் வகையில் தமிழ், ஆங்கிலம் என கலந்து உருவாக்கப்பட்டுள்ள பாடல் அனைவரது காலர் டியூனாகவும் மாறியுள்ளது. விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இந்த பாடலை பகிர்ந்து மேலும் வைரலாக்கி வருகின்றனர்.
மாஸ்டர் படத்தின் ஒவ்வொரு அப்டேட்களையும் ஏதேனும் சிறப்பான நாளை முன்னிட்டு வெளியிட்டு வருகிறது படக்குழு. அதுபோல, குட்டி ஸ்டோரி பாடலையும், காதலர் தினத்தன்று வெளியிட்டது. இந்நிலையில், படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்றும் வெளியாகியுள்ளது.
அதன்படி, நாளை மகா சிவராத்திரி நாள் கொண்டாடப் படவிருக்கும் வேளையில் மாஸ்டர் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதில் கூடுதல் சிறப்பு என்னவெனில், ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும் வகையிலான செம குத்து பாடலாக உருவாகியுள்ள பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளதாகவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.
ஆனால், இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் மாஸ்டர் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை. இருப்பினும், ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுக்கும் வகையில் திடீரென இரண்டாவது சிங்கிளை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கலாம் என்று பேசப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், வருகிற 28ம் தேதியோடு மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைய இருப்பதால் மார்ச் 9ம் தேதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!
-
அதானியை காப்பாற்ற 35 ஆயிரம் கோடி LIC நிதியை வழங்கிய ஒன்றிய பாஜக அரசு... அம்பலப்படுத்திய பிரபல நாளிதழ் !
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!