Cinema

ஆஸ்கரை ஆக்கிரமித்த ‘ஜோக்கர்’ : பல பிரிவுகளின் கீழ் பரிந்துரை! #Oscars2020

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா ஆண்டுதோறும் அமெரிக்காவில் நடக்கிறது. இதன்படி, இந்தாண்டுக்கான 92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 10ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்தாண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் அதிகபட்சமாக ‘ஜோக்கர்’ படம் 11 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Best Picture Nominees

டாட் பிலிப்ஸ் இயக்கத்தில், ஜோக்குயின் போனிக்ஸ் நடிப்பில் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தி ஐரிஷ்மேன், ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் ஹாலிவுட் மற்றும் 1917 ஆகிய படங்கள் 10 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த தழுவல் திரைக்கதை உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் ‘ஜோக்கர்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜோக்கர் கதாபாத்திரத்தில் நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

மேரேஜ் ஸ்டோரி (Marriage Story), பாராசைட் (Parasite), லிட்டில் வுமன் (Little Women), ஜோஜோ ரேபிட் (Jojo Rabbit) ஆகிய படங்கள் தலா 6 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

Also Read: தொகுப்பாளருக்கு பதிலாக ‘பலே’ திட்டத்தை கையில் எடுத்திருக்கும் ‘ஆஸ்கர்’ குழு!